பக்கங்கள்

08 அக்டோபர் 2010

வெலிக்கடைச் சிறைச்சாலையைத் துப்புரவு செய்யும் பணியில் சரத்!

30 மாத காலச் சிறைத் தண்டனையை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுபவித்துவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச்சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் சிறைக் கைதிகள் அனைவரும் வெலிக்கடைச் சிறைச்சாலையின் உட்புறத்தைத் துப்புரவு செய்தார்கள். அப்பணியில் சரத் பொன்சேகாவும் ஈடுபட்டிருந்தார் என வெலிக்கடைச் சிறைச்சாலையின் மேற்பார்வையாளர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கமாகும். எனவேதான் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சரத்தையும் இவ்வேலையில் ஈடுபடுத்தியதாக அவர் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.