பக்கங்கள்

10 அக்டோபர் 2010

எனது கணவரை மீட்டுத்தாருங்கள்-திருமதி இளந்திரையன்.

எனது கணவர் எங்கோ உயிருடன் இருக்கின்றார். அவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.” இப்படி தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளராக இருந்த இளந்திரையன் அல்லது மார்ஷல் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி வனிதா சிவரூபன்.
அவர் நேற்று மட்டக்களப்பில் வைத்து ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கினார்.
அவர் அச்சாட்சியத்தில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-
காயப்பட்டிருந்த எனது கணவரை கடந்த வருடம் மே 17 ஆம் திகதி இராணுவத்தினர் சிகிச்சைக்கென அழைத்துச் சென்றனர். அவர் அழைத்துச் செல்லப்பட்டு நாட்களின் பின் எங்களைச் சந்திக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி இருவர் வந்திருந்தனர்.
அப்போது நானும், குழந்தைகளும் வவுனியா அகதி முகாமில் தங்கி இருந்தோம். கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் அவரிடம் அழைத்துச் செல்ல வந்திருந்தனர் என்றும் கூறினார்கள்.
ஆயினும் நாம் அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. கணவரைச் சென்று பார்க்கவில்லை. அதன் பின் கணவர் குறித்து எந்தத் தகவலுமே இல்லை. ஆனால் அவர் எங்கோ உயிருடன் இருக்கின்றார். அவரைக் கண்டுபிடித்து மீட்டுத் தாருங்கள்.
இதே நேரம் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியம் வழங்குகையில்,
நாம் இடம்பெயர்ந்து ஏனைய பொதுமக்களுடன் வட்டுவால் என்ற இடத்தை அடைந்திருந்தபோது இராணுவத்தினர் விசாரணைக்கு என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றனர், ஆனால் இன்று வரை அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.