ஜனநாயகத் தேசிய முன்னணித் தலைவர் சரத் பொன்சேகா தனது மனைவி, மக்களிடம் தனக்காக எவரிடமும் மன்னிப்பு கோர வேண்டாம் எனக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவை நேற்று பார்வையிடச் சென்ற போது, தம்மிடம் இவ்வாறு சரத் பொன்சேகா கூறியதாக ஊடகங்களிடம் அனோமா தெரிவித்தார்.
எந்தத் தவறையும் தான் செய்யவில்லை என்றும், எவரும் தனக்காக மன்னிப்பு கோரத் தேவையில்லை என்றும் சரத் பொன்சேகா தம்மிடம் கூறியுள்ளதாக அனோமா மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.