கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான சாய்ந்தமருதுவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தைப் போலீசார் மீட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் மீட்கப்பட்ட இந்தச் சடலத்தின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தது. இறந்தவர் 22 வயதான பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கரவாக்கு மேட்டுவேட்டையிலுள்ள வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்தவராவார்.
இவரது கணவர் வெளிநாடொன்றில் வேலை பார்த்து வருவதாகத் தெரியவந்துள்ளது. சடலம் தற்போது கல்முனை அஷ்ரப் மருத்துவமனையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.