பக்கங்கள்

01 நவம்பர் 2010

இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு கடுப்பு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்பு அண்மைக் காலமாக வலுவடைந்து வருவதால், இந்தியா கடுப்படைந்துள்ளது. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் எல்லைக்குள் சீனாவின் நுழைவு இந்தியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் இந்தியாவின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு யுத்தத்தின் முடிபுக்குப் பின்னர் சீனாவுடன் தனது உறவை பலப்படுத்தி வருவதுடன் சீன நாட்டவர்கள் இலங்கையில் வீதி அமைப்பு பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதியளித்தது.
இது தொடர்பில் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த இந்தியா, சீனர்களின் ஊடுருவல் இலங்கைக்கூடாக ஏற்படுவதை தடுப்பதற்காக சில இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்வதற்கு அழுத்தம் கொடுக்க அதற்கு இலங்கை அரசும் அனுமதித்திருந்தது.
இந்நிலையில் ஷாங்காய் எக்ஸ் போ கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த சீனப் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதுடன், இலங்கையின் உட்கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும் சீனாவின் உதவியை கேட்டிருந்தார். இதனால் இந்தியா கடுப்பேறியுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.