மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருளுடன் யாழ்.மண்டைதீவு பிரதேசத்தில் இரு தமிழ் இளைஞர்கள் இன்று காலையில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்விளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை இரகசிய தகவல்கள் ஒன்றின் அடிப்படையில் முற்றுகையிட்டு பொலிஸார் கைதை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்களின் உடைமையில் இருந்து ஒரு கிலோ எடையுடைய வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாவும் இருவரும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் தற்பொழுது வைக்கப்பட்டிருப்பதாவும் அறியப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.