பக்கங்கள்

31 அக்டோபர் 2010

நுரைச்சோலையில் சீனர்களிடையே மோதல்!

கல்பிட்டி, நுரைச்சோலையில் அமைக்கப்படுகின்ற அனல் மின்னிலையத்தில் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்வது தெரிந்ததே. இந்தத் தொழிலாளர்களிடையே மோதல் வெடித்ததை அடுத்து ஒரு சீனருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மின்னிலையத்தின் பணிகள் ஐந்து சீன ஒப்பந்ததாரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே வெவ்வேறு ஒப்பந்ததாரர்களுக்கு இடையிலான தொழிலாளர்களிடையே இம்மோதல் வெடித்தது.
கடந்த 11 மாதங்களாக தனது தொழிலாளர்களுக்கு ஒரு சீன ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்கவில்லை. எனவே இந்தத் தொழிலாளர்கள் நேற்று சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் பிற சீனத் தொழிலாளர்கள் இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள சீனத் தொழிலாளர் புத்தளம் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.