இன்று காலையில் மூதூரிலுள்ள வட்டம பகுதியில் தவறுதலான வெடிச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூதூர் கடனீரேரிக்கு அருகில் நடந்த இச்சம்பவத்தில் மூன்றுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட வயதான ஐந்து சிறுவர்கள் காயமடைந்தனர். மூதூர் கடற்கரையில் பிளாஸ்டிக் பை ஒன்றினுள் இருந்த இரும்பாலான ஒரு பொருளை எடுத்து இச்சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோதே அது வெடித்துள்ளது. மோட்டார் குண்டு ஒன்றின் பாகமாக அப்பொருள் இருக்கச் சந்தர்ப்பம் உள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
காயப்பட்ட ஐந்து சிறுவர்களும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் எட்டு வயதான சிறுவன் ஒருவன் பலியாகி விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.