பக்கங்கள்

25 அக்டோபர் 2010

தமிழினப் படுகொலையை விசாரித்து தீர்வை பெற்றுத்தர வேண்டும்!

இலங்கையில் கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை சர்வதேசம் பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித் துள்ளது.யாழ்ப்பாணம் காங்கிரஸ் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அம் முன்னணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய மக் கள் முன்னணியின் தலைவர் எஸ்.வரதராஜன்,முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் திருலோகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த 60 வருடங்களாக இலங்கை அரசு தமிழ் இனத்துக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொண்டு வரும் இனப்படு கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை சர்வதேசம் நடத்த வேண்டும்.
தண்டனையால் தீர்வு கிடைக்காது
தற்போது இலங்கை அரசுக்கு எதிராக பல சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன. இந் நாடுகள் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அக்கறையாகவுள்ளன.அவ்வாறு போர்க்குற்றம் தொடர்பில் விசா ரணை நடத்தப்பட்டால் அதற்கு பின்னணி யாக இருந்த இலங்கை அரசுக்கு சர்வதேச நீதிமன்றால் தண்டனை வழங்கப்படும். இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப் போவதில்லை.
ஆனால் இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப் படுகொலை என சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் ஒருமித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலமே சர்வதேசம் தமிழினத்தை பாதுகாப்பதற்கு நிரந்தர அரசியல் தீர் வொன்றை இலங்கை அரசிடம் பெற்றுக் கொடுப்பார்கள். எனவே 60 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழ் மக்களை திட்டமிட்டு அழிக்கும் இனப் படுகொலை தொடர்பில் விரிவான ஆவணம் ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும்.
இப் பணியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திடம் எமது இனத்தை திட்ட மிட்டு அளிக்கும் இலங்கை அரசின் இனப் படுகொலையை நிரூபிக்க முடியும்.
இவ்வாறு நடைபெற்ற இனப் படுகொலை யின் ஒரு பகுதியே போர்க் குற்றம் என் பதை சர்வதேசத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும். தற்போது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை திசைத்திருப்பவோ ஜனாதி பதி மகிந்த ராஜபக்­வினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இனப் படுகொலையை தமிழ்த் தேசத்தின் மீது மேற்கொண்டது இலங்கை அரசே ஆகும் அத்தகைய இனப்படுகொலையை மேற் கொண்ட இலங்கை அரசு, தான் மேற் கொண்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை தானே நடத்த முற்படுவது கேலிக்குரியதாகும்.
அவ்வாறு நடத்தினால் கூட அந்த விசாரணைகள் நீதி நியாயம் வழங்கும் வகையில் பக்க சார்பற்றதாக இருக்க முடியாதென்பதே உண்மையாகும். இதனை நிரூபிப்பதற்கு கடந்த அறுபது வருடங்களாக அளவுக்கதிகமான சான்றுகள் உள்ளன.கடந்த காலங்களில் இனப்பிரச்சினை யோடு தொடர்புபட்ட விதத்தில் பல்வேறு கார ணங்களுக்காக இலங்கை அரசாங்கத்தி னால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் காலத்தை இழுத் தடித்து, எந்த வித பலனையும் தராத ஏமாற்றும் முயற்சிகளாகவே நடந்து முடிந்தன.
மேலும் சிங்கள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவாறு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக சாட்சியங்களை அளிக்கக் கூடிய பாதுகாப்பான சூழல் இல்லை. இன்னமும் கடத்தல், கொலைகள், கொலை மிரட்டல்கள் என்பன தொடர்ச்சியாக இடம் பெற்று வருவது இந்த அச்ச சூழலை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் ஆணைக்குழுவுக்கு இனப்படு கொலை சம்பந்தமாகவோ அல்லது குறைந்த பட்சம் போர் குற்றங்கள் இடம் பெற்றமை தொடர்பாகவோ விசாரணை மேற் கொள்வதற்கான ஆணை எதுவும் வழங்கப் பட்டிருக்கவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத் திற்கான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் இனப் படுகொலை அல்லது குறைந்த பட்சம் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படு வத னை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையி லேயே அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை பற்றிய விசாரணைகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுமாயின் அந்த விசா ரணைகள் நேர்மையாகவோ தமிழ் மக்க ளுக்கு பலன் தருவதாகவோ அமைய மாட் டாது என்பதோடு தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை மூடி மறைப்பதற்கே வழி வகுக்கும்.
சாட்சியம் அளிப்பதில்லை
எனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிப்பதில்லை என தீர்மானித்துள்ளது. அத்துடன் இந்த ஆணைக்குழுவுக்கு ஏனைய தமிழ் அரசி யல் கட்சிகள் சாட்சியமளிக்குமாயின் அது இனப்படு கொலையை மூடி மறைக்கும் செயற்பாட்டிற்கு துணை போவதாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின் றோம். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற, இடம் பெற்று வரும் இனப்படுகொலையை விசாரிப் பதற்காக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்துவதுடன் அவ்வாறான விசாரணை ஒன்று இடம்பெற்றால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உறுதி அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.