இலங்கையிலிருந்து மேற்கொள்ளும் சர்வதேச அழைப்புகளுக்கான அரசாங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்காற்று நிலையப் பணிப்பாளர் அனுஷா பல்பிட்ட தெரிவித்தார். கிட்டத்தட்ட 30 வீதத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனை அடுத்து இணைய அழைப்பு மற்றும் தொலைபேசி வலையமைப்புகளுக்கு ஊடாக எடுக்கப்படும் அழைப்புகளுக்கு இடையிலான கட்டண வித்தியாசங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை சட்டவிரோதமான இணைய அழைப்புகளைப் பயன்படுத்துபவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தாம் எடுப்பதாகத் தெரிவித்த அவர், இணையச் சேவையை வழங்குபவர்கள் தமது விவரங்களைத் தம்மிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.