பக்கங்கள்

02 அக்டோபர் 2010

மன்னிப்புக் கோர வேண்டுமா? நிராகரித்தார் அனோமா.

சரத் பொன்சேகா மன்னிப்புக் கோர வேண்டும் என்ற கோரிக்கையை அவரது மனைவி அனோமா பொன்சேகா நிராகரித்துள்ளார். தனது கணவரின் தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கம் எதை எதிர்பார்க்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண் டும் எனவும் அவர் கூறினார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீடு செய்தால் தண்டனையை நீக்குவது பற்றி அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் எனக் கூறியதைக் கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேன்முறையீடு என்பதால் கரு தப்படுவது யாது என தெளிவாக அவர் கூற வேண்டும் என நேற்று மாலை தனது கணவரை வெலிக் கடைச் சிறைச்சாலையில் பார்த்து விட்டு வந்து ஊடகவியலாளர்களு டன் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் தேசிய உடையை கையில் வைத்திருந்த அவர், எனது கணவரின் ஞாபக மாக இது மட்டுமே தற்போது உள் ளது என கண்ணீர் மல்கக் கூறி னார். சரத் பொன்சேகாவை அரசியல் கைதிகளை வைத்திருக்கும் கூடத் தில் வைத்துள்ளனர்.
அவரது கூடம் நுளம்பு நிறைந்ததாக உள்ளது. படுப்பதற்கு கன்வஸ் பாய் மட்டு மேயுள்ளது. ஏனைய கைதிகள் போன்று இவருக்கு ஒரு எண் வழங் கப்பட்டதா எனக் கேட்கப்பட்டபோது தனக்கு அது தெரியாது என்றார் அவர். ஒரு போர்வை, இரண்டு துவாய் கள், ஒரு தலையணை உறை என் பவற்றை அனோமா தனது கணவ ருக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட சில பொருள்களில் அடங்கும் என தெரிய வருகின்றது. நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து பாதுகாத்த எனது கணவருக்கு வெகுமதி கிடைத்துள் ளது. எனது கணவரை இப்படி நடத் தும் அளவுக்குக் கொடுமைக்கார ராக ஒருவர் இருக்க முடியும் என என்னால் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.