கல்முனையில் கஞ்சா கலந்த 5500 மதன கோகன அபின் லேகிய பக்கற்றுகளை விற்பனை செய்த 3 வர்த்தகர்களை நேற்று மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.கல்முனை பொதுச் சந்தைக்குள் இரு வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைத்த போதே இவ் வர்த்தக நிலையங்களிலிருந்து இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
220 பெட்டிகளில் குறித்த மதன லேகியங்கள் அடைத்து வைகப்பட்டிருந்ததாகவும் இதன் பெறுமதி சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் எனவும் அவர் தெரிவித்தார்.கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் களுவாஞ்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.