பக்கங்கள்

31 ஜூலை 2012

இலங்கையே பற்றி எரிந்து கொண்டிருந்தபோது வீணை வாசித்த கருணாநிதியின் டெசோவில் கூட்டமைப்பு கலந்துகொள்வதா?-என்.ஸ்ரீகாந்தா

இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தி.மு.க தலைவர் கருணாநிதி கைகட்டிப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இப்போது டெசோ மாநாட்டை நடத்தி எங்களிடம் துக்கம் விசாரிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களை அழைத்திருக்கிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் அரசியல் உயர் பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்: தி.மு.தலைவர் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான டெசோ மாநாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள இருக்கும் செய்தியானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமக்குத் தேவைப்படும் நேரத்தில் கையில் எடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கும் சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு த.தே.கூ விழுந்து விடக்கூடாது. கலைஞர் கருணாநிதி மீது நீண்டகாலமாகவே இலங்கைத் தழிழர்கள் அன்பும், மதிப்பும் வைத்திருக்கின்றார்கள். ஆனால் நடந்து முடிந்த இறுதிக்கட்ட போரில் வன்னியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிர் பறிக்கப்பட்ட போது தமிழ் நாட்டு முதல்வர் பதவியில் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர் விடயத்தில் சிறிதளவும் கண்ணீர் சிந்தாதவர் கலைஞர் கருணாநிதி. எமது மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் தமிழ் நாடு முழுவதும் உணர்ச்சிப் பேரலைகள் மேலோங்கியிருந்த போது முத்துக்குமார் தீக்குளித்து உயிர்திறந்த போதும் தனது பதவியைக் கட்டிப்பிடித்து இருந்தவர் கலைஞர். இந்திய மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த இன அழிப்பு போரை நிறுத்தியிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் வந்திருக்காது. இலங்கைத் தமிழர் விடயத்தில் எதுவுமே செய்யாத கருணாநிதி இப்போது ஈழத்தைப் பெற்றுக் கொடுப்பதாக பாசாங்கு செய்கின்றார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.