யாழ்.நகரிலுள்ள நடைபாதை புடைவைக் கடைகள் இரண்டு இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஆயினும் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்த கடைகளிலுள்ள மின்னொழுக்கு இவ்விபத்திற்கு காரணமாயிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.