ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளம் முற்றுகையிடப்பட்டமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று தெரிவித்துள்ளார்.
மேற்படி இணையத்தளம் முற்றுகையிடப்பட்டபோது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 9 பேருடன் இணைந்து இந்த வாரம் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
இணையத்தளங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் நாட்டில் இல்லையெனவும் அவர் கூறினார். ஆகையினால் ஐக்கிய தேசியக் கட்சியின் இணையத்தளமான ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளம் எந்தச் சூழ்நிலையிலும் பதிவு செய்யப்படமாட்டாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.