முற்றும் துறந்த பௌத்த பிக்கு ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக, வேறு பெயர் ஒன்றில் பதிவுத் திருமணம் செய்து கொண்டமை, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
வெல்லாவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது போலியான ஆவணங்களைக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.