பக்கங்கள்

20 ஜூலை 2012

மோதாதே முகவரி இழப்பாய்; ரிஷாத்துக்கு யாழ். சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் யாழ். நீதிமன்றின் முன்னால் ஒன்று கூடிய சட்டத்தரணிகள், அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.