பக்கங்கள்

21 ஜூலை 2012

சிவந்தனின் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள்.

லண்டன் ஒலிம்பிக் திடலுக்கு முன்பாக நாளை தினம் ஆரம்பமாகவுள்ள மனித நேயன் கோபி சிவந்தனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகள் பெறுமளவில் பங்கெடுப்பதன் மூலம் சிவந்தனின் கோரிக்கைகள் சர்வதேகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மனித நேயன் சிவந்தனின் உணர்வு மிக்க செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது இனத்திற்கு விடுதலை வேண்டி முதன் முதலாக பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவுக்கு நடைப்பயணம் செய்து ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்திற்கு எமது இனத்திற்கு ஏற்பட்ட துயரங்களையும் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்தார். அதே போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒலிப்பிக் விளையாட்டை பார்வையிடுவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள்இ மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் திடலுக்கு முன்பாக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். விடுதலைப் போராட்டத்தில் சர்வதேச நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த சிவந்தனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதற்கு புலம்பெயர் நாடுகளின் இயங்கிவரும் தமிழர்களின் ஒரே கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானியா கிளை அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. தாயக மக்களின் விடுதலைக்காக மனித நேயன் சிவந்தன் துணிச்சலுடன் இப்போராட்டத்திற்கு முன்வந்துள்ள நிலையில்இ அவரின் உன்னத தியாகச் செயற்பாட்டிற்கு உரமுட்டுவதுடன்இ சர்வதேசத்தை அதிரவைக்குமளவுக்கு பிரித்தானியா வாழ் மக்கள் மட்டுமின்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.