வவுனியா சிறைச்சாலையில் இருந்து அரசியல் கைகதிகள் 30 பேரில் 27 பேர் நேற்று நள்ளிரவைத் தாண்டி இன்று அதிகாலை மணியளவில் மகர சிறைச்சாலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக மகர சிறைச்சாலையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 27 பேரும் கை, கால்கள் உடைந்த நிலையிலும், உடைகள் மாற்றப்படாமலும், ரத்தம் தோய்ந்த உடைகளுடனும், காயங்களுடனும், உணவு கூட வழங்கப்படாத நிலையில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 30 பேரில் மிகுதி 3 பேரின் நிலை மிகவும் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராகம அல்லது கம்பகா பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.