பக்கங்கள்

15 ஜூலை 2012

துமிந்த நாடு திரும்பா விட்டால் சிங்கப்பூர் அரசிடம் முறையிடப்படும்!

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவை துரித கதியில் நாடு திரும்பாவிட்டால், சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொலைக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நாட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஹிருனிகா, கடந்த ஒக்ரோபர் மாதம் இடம்பெற்றமுல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. என்றாவது ஓர் நாள் துமிந்த நாடு திரும்ப வேண்டி ஏற்படும் எனவும், வாழ்க்கை முழுவதும் அவரால் சிங்கப்பூரில் தங்கியிருக்க முடியாது எனவும் ஹிருனிகா தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களில்16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.