2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு ஆளாகி தப்பிப் பிழைத்த நாளில் இருந்து, கோத்தபாய ராஜபக்ஷ மனநிலை குழப்பிப்போயுள்ளார் என பிரபல சிங்கள ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. குண்டு துளைக்காத காரில் அவர் பயணித்தவேளை அவர்மேல் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பாரிய வெடிப்பால் அவரது வாகனம் சேதமாக்கப்பட்டது. இதனால் அதிர்சியடைந்த சாரதி வாகனத்தை வேறு திசையில் திருப்பிபவே, குண்டுவெடிப்பின் அதிர்சி மற்றும் வாகனம் சடுதியாக நின்றமை போன்ற காரணங்களால் அவரது இடதுபுர மண்டை அடிபட்டுள்ளது.
சற்றும் எதிர்பாராத இத் தாக்குதலால், தனது மண்டையை தாமே மோதிக்கொண்ட கோத்தபாய பிற்காலங்களில் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது 2 நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். கோத்தபாயவின் குடும்பத்தோடு நெருங்கிப் பழகும் இவர்கள் தெரிவித்த தகவலை அடுத்தே சிங்கள ஊடகமான கொழும்பு ரெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அடிக்கடி கோபப்படுதல், சம்பந்தமே இல்லாமல் நேர்காணலின் போது ஊடகவியலாளர்கள் மீது பாய்வது, தனது மனைவிக்காக நாய்குட்டியை தருவிக்க விமானத்தை மாற்றுவது, ஆட்கடத்தல், என்பனபோன்ற பல செயல்களை அவர் இதனால் தான் மேற்கொள்கிறாராம் என்றும் சொல்லப்படுகிறது.
கோத்தபாயவின் மண்டை அடிபட்ட பின்னர், அவர் வைத்தியசாலை சென்று தலையை ஸ்கேனிங் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளிகள் பொதுவாக நீதிமன்றில் கூறும் விடையத்தை தான் இவர்களும் தெரிவிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் கோத்தபாய மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் தள்ளுபடியாகிவிடும் என்று நினைக்கிறார்களோ என்னவோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.