பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2012

வலி,கிழக்கில் சிங்கள இளைஞர் தமிழ் யுவதி மீது பாலியல் வன்புணர்வு!

வலி.கிழக்குப் பிரதேசத்தில் யுவதி ஒருவர் பெரும்பான்மையின இளைஞர் ஒருவரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பிரஸ்தாப யுவதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைக் கேள்வியுற்று அங்கு திரண்ட ஊர் மக்கள் குறித்த இளைஞரைப் பிடித்து நன்கு கவனித்த பின்னர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வலி.கிழக்குப் பிரதேசத்தில் லக்ஸபானா மின் விநியோக இணைப்பு வேலையில் ஈடுபட்டு வரும் மின்சார சபையின் பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் வீதியால் சென்று கொண்டிருந்த இந்த யுவதியை இழுத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. 23 வயதான குறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி நேற்று போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான இளைஞர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.