பக்கங்கள்

23 ஜூலை 2012

உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது அடாவடித்தனம் புரியமாட்டேன்- நீதவான் கணேசராசா மன்றாட்டம்!

உதயன் பத்திரிகை ஆசிரியர் தொடர்பாக யாழ்.நீதவான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவை ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நீடித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், யாழ். நீதவானை ஓகஸ்ட் 28 இல் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது. இதேசமயம் பிரதிவாதியான யாழ். நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா, ஜுலை 17 ஆம் திகதியிட்டு மேல்முறையீட்டு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் உதயன் ஆசிரியருக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொள்வதற்காக அறிவித்துள்ளார். மேலும், தான் நீதவான் நீதிமன்றத்தின் மேற்படி வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதால் தன்னை இவ்வழக்கின் பிரதிவாதி என்ற வகையில் நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து விடுவிக்கும்படி அவர், கேட்டுள்ளார். எனினும் நீதிமன்றில் நீதவான் கணேசராசா தனது அதிகாரத்தையும் மீறி அடாவடித்தனம் புரிந்தமைக்காக அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.