பக்கங்கள்

07 ஜூலை 2012

காரைநகரில் மாற்றுவலுவுள்ள பெண்ணை பாலியல் வல்லுறவிற் குட்படுத்திய சந்தேகநபர்களின் பிணைமனு நிராகரிப்பு.

காரைநகரில் மாற்றுவலுவுள்ள பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களின் பிணைமனு ஊர்காவற்துறை நீதிவானால் நேற்று மறுதலிக்கப்பட்டுள்ளது.காரைநகரில் இரும்பு வியாபாரம் செய்வதற்காக சென்ற இரண்டு நபர்கள் மாற்றுவலுவுள்ள பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய போது அப்பகுதி பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் காரைநகர் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். காவற்துறையினர் சந்தேக நபர்கள் மீது ஊர்காவற்துறை நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விசாரணையின் தொடராக நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஜோய் மகாதேவா(முன்னாள் பெண் நீதிபதி) சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணைமனுவை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்கும்; போது நீதி மன்றின் மீதான நம்பிக்கை மக்களிடம் இல்லாது போய் விடும் என்ற கருத்தை முன்வைத்தார். இதனை எற்றுக்கொண்ட நீதிவான் பிணை மனுவை நிராகரித்ததுடன் இவ்வழக்கை எதிர்வரும் 11ம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே யாழ்.புகையிரத நிலையப்பகுதிக்கு பெண்ணொருவரை கடத்தி சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு இன்று யாழ்.நீதிமன்றினில் நடைபெற்றது.பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபர்களுள் ஒருவரை அடையாளங்காட்டியிருந்தார்.சுமார் 36 வயதுடைய பெண்ணினை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி குற்றச்சாட்டினில் பாடசாலை மாணவனுள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.