தமிழத் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் சிவஞானம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன் ஆகியோர் தற்போது கனடா சென்றுள்ளனர்.
இன்று யூலை 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் கனடாக் கிளை நடத்தும் சர்வதேச தமிழர் விழாவில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழர் பண்பாடு மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பான விடயங்களில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
விமானம் மூலம் கனடாவின் ரொரென்ரோ நகரைச் சென்றடைந்த மேற்படி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கச் சென்றிருந்த உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் திரு வேல் வேலுப்பிள்ளை உட்பட இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் அவர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் இங்கே காணப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.