பக்கங்கள்

09 ஜூலை 2012

வேலணையில் பெண்களிடம் சேட்டை செய்ததால் குழு மோதல்!

யாழ்.வேலணை சாட்டிக் கடற்கரையில் பொழுதைக் கழிப்பதற்காக சென்ற இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததையடுத்து மது போதையில் இருந்த ஏராளமான இளைஞர்களை ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. சாட்டிக் கடற்கரையில் ஒரு இளைஞர் குழு அங்கு நின்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட போதே மற்றைய குழுவினர் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.