வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்களது பூர்வீக நிலங்களை பாதுகாத்துக் கொள்ள வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் பாரியளவில் பிரச்சாரங்களை செய்து வருகின்றது மறு புறத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி கட்சி வடக்கில் தேர்தல்களை நடத்தக் கூடாது கோரிக்கை விடுக்கிறது.
வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தக் கூடாது என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று கோருவதை இனவாத கோரிக்கையாகவே கருதப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து மகிந்த தலமையிலான அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.