பூநகரியில் தவறுதலாக ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தனது வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக மண்ணெண்ணெய்யை ஊற்றிய சமயம் தனது உடையிலும் ஊற்றப்பட்ட போதும் அதனைப் பொருட்படுத்தாது குறித்த மாணவி, விளக்கைப் பற்ற வைத்தபோது, உடையில் தீ பற்றிப் பரவியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் உடனடியாக அவர் பூநகரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்படுள்ளார்.
பூநகரி மகாவித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்கும், பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சந்தனகுமார் மோனிஷா என்ற 14 வயது மாணவியே மேற்படி தீக்காயங்களுக்கு உள்ளானவராவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.