யாழ்ப்பாணம் நாரந்தனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் கோரமாக கத்தியால் வெட்டிக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று மாலை 5 மணியளவில் நாரந்தனை தெற்கு பகுதியிலுள்ள கள்ளு விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் நாரந்தனையைச் சேர்ந்த எஸ்.அனுராஜ் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை நீதவான் சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த சடலத்தில் கடுமையான கத்தி குத்துக்காயங்கள் நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். இவர் மேலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.