வவுனியா நகர் பிரதேசத்தில் விசர் நாயொன்று நேற்று மாலை சில மணி நேரங்களுக்குள் 34 பேரைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பிரேசத்தில் நேற்று மாலை பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நாய் தொடர்ந்து மக்களைக் கடித்ததால் நாய் விசர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதனால் காயமடைந்த அனைவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.
இறுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பிடிக்கப்பட்ட நாயை காவல்துறையினர் கருணை கொலை செய்ததாக தெரியவருகிறது. எனினும், இந்த நாய் காவல்துறையினரின் ஊடாக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக முன்னர் தகவல் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.