பக்கங்கள்

16 ஜூலை 2012

ஈ.பி.டி.பி வாகனம் மோதி ஆட்டோ செலுத்துனர் காயம்.

திடீர் என வீதிக்குக் குறுக்கே பாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வாகனத்துடன் ஆட்டோ ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த சபேசன் (வயது31) என்னும் குடும்பஸ்தரே மேற்படி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் ஆவார்.மாரடைப்புக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியைப் பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரை வைத்தியசாலை வாயிலில் இறக்கி விட்டு வெளியே வந்த அவரது வாகனத்தைச் சாரதி வைத்தியசாலை வீதியிலுள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டுள்ளார். அவ்வேளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களைக் கருத்தில் கொள்ளாமல் நடு வீதியில் இருந்து பின்பக்கமாக வந்து திரும்ப முற்பட்டவேளை வீதியால் வந்த ஆட்டோ ஒன்று அந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோ சாரதி தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினருடைய வாகனம் சிறு சேதங்களுக்கு உள்ளான அதேவேளை குறித்த ஆட்டோ பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு வருகை தந்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸார் இதனைப் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியதோடு விபத்தில் சம்பந்தப்பட்டவர் தொடர்பிலும் சேதமாக்கப்பட்ட வாகனம் தொடர்பிலும் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் பதிலளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.