மண்டைதீவுக்கு உயரழுத்த மின் இணைப்பு மூலம் மின் வழங்கப்படும். இதற்கு யாழ். நகரில் இருந்து 3 கிலோ மீற்றர் தூரம் கடலுக்கு ஊடாக இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படும். வடக்கின் வசந்தத்தின் கீழ் இத்திட்டத்தைப் பூரணப்படுத்தி மின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரதம பொறியியலாளர் என்.குணசீலன் தெரிவித்தார்.
தீவக அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், சி.அலன்ரின் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.இதில் பொது அமைப்பின் சார்பில் வருகை தந்தோர் மண்டைதீவுக்கு மின் கிடைக்குமா இல்லையா என்பது இன்று தெரியவேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த வடக்கின் வசந்தம் மின் பொறியியலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.செப்ரெம்பர் முதல் வாரத்தில் மண்டைதீவுக்கான அனைத்து வேலைகளும் பூரணப்படுத்தி மின் வழங்கப்படும்.மூன்று கடல் மைல் தூரத்துக்கான இணைப்பு கடலுக்கு ஊடாகக் கொண்டு வரப்படவுள்ளது.
இதற்கான உபகரணங்கள் யாவும் கொண்டுவந்து சேர்த்து விட்டோம். விரைந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.