மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குள் எரிந்த நிலையில் யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை பாலமீன்மடு வேம்படி சித்திவிநாயகர் ஆலயத்திலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பாலமீன்மடு, தண்ணிக்கிணறடி வீதி நந்தகுமார் சீதா என இனங் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தற்கொலையாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி சின்னையா விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு உத்தரவிட்டார்.
இதேநேரம் குறித்த யுவதியின் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் குறித்த யுவதி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.