வவுனியா காவல்துறையினரால் சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின்
பெற்றோருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 29.06.2012 அன்று, வவுனியா
சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரும், சிறைக்
காவலர்களும் இணைந்து சிறைக்கைதிகள் மீது நடத்திய தாக்குதலில் காயமடைந்து மஹர
சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமான கணேசன் நிமலரூபனின் பெற்றோருக்கு
எதிர்வரும் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றிற்கு சமூகமளிக்குமாறு வவுனியா
காவல்துறையினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
நெளுக்குளத்திலுள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம்
சென்ற வவுனியா காவல்துறையினர் அழைப்பாணையை அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத
நிலையில், அங்கிருந்த உறவினரிடம் கையளித்துச் சென்றுள்ளனர்.
06.07.2012ந் திகதி வரையப்பட்ட இந்த அழைப்பாணையின்
பிரகாரம், நிமலரூபனின் மரணம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு நிமலரூபனின் பெற்றோர்
19.07.2012ஆம் திகதி காலை 09.00 மணிக்கு நீர்கொழும்பு நீதிமன்றிற்கு வருமாறு
அழைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.