பக்கங்கள்

27 ஜூலை 2012

சுவிசில் இருந்து 3 தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்! அதிர்சியில் சுவிஸ் தமிழர்கள்!!

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத்தமிழர்கள், சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள விடயம் சுவிஸ் தமிழர்களை அதிர்ச்சி கொள்ளவைத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமான நிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பிரித்தானியா , அவுஸ்றேலியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் தமிழர்களை திருப்பி அனுப்ப தொடங்கியுள்ளது. சுவிஸ் நாட்டில் நிலையான அகதி அந்தஸ்துஅற்ற நிலையில், 2 000 தமிழர்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், மூவர் நாடுகடத்தப்பட்ட விடயம் , சமீபத்திய காலங்களில் அகதிஅந்தஸ்து கோரிய தமிழர்களை அச்சங்கொள்ள வைத்துள்ளது. திருப்பி அனுப்பட்டவர்கள் மூவரும் யாழ்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் , சுவிஸ் தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஓருங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் பங்கெடுத்திருந்த சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான திணைக்கள அதிகாரியொருவர், இலங்கையில் இறுதிபோர் இடம்பெற்ற பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் அகதிஅந்தஸ்து கோரிக்கைகளை சாதகமாக நோக்கப்படும் நிலை குறைவெனத் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பபடும் இலங்கையர்கள் , சித்திரவதைகளையும் அச்சுறுத்தல்களையும் சிறிலங்காவில் எதிர்கொள்கின்றனர் என பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன. உறுதிப்படுத்தப்படதாக பிந்திய தகவலொன்றின்படி , 13 தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுஇவ்வாறிருக்க, நாடு திரும்பும் அகதிகளுக்கு செங்கம்பளம் விரிக்கமுடியாது எனவும் , சிறிலங்காவின் சட்டத்தின் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.