அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 8 சிங்களவர்கள் உட்பட 109 பேர் நேற்று மாலை வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையிலிருந்து 25 கடல்மைல் தொலைவில் கல்குடா கடற்பகுதியில் கடற்படையினர் இவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுடன் அவர்கள் பயணிக்கவிருந்த றோலர் படகும் நேற்றிரவு திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு, நேற்று கடற்படையினரின் இரண்டு பஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது வாக்குமூலத்தை கேட்டறிந்த நீதிபதி ஏ.எம்.எம். றியாஸ் 109 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை, கல்பிட்டி, தலவாக்கலை, கல்முனை, போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.