பக்கங்கள்

16 ஜூலை 2012

சுற்றி வளைப்புத் தேடுதலுக்குச் சென்ற பொலிஸார் மீது சுற்றி வளைத்துத் தாக்குதல்!

பண்டாரகம பிரதேசத்தில் சட்ட விரோத விலங்கு வதை நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாணந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வலய குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன் தினம் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது விலங்கு வதையில் ஈடுபட்டிருந்த சிலர் ஆயுதங்களால் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.