றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் பிரேதே பரிசோதனையை அரசாங்கம் நிறைவு செய்திருக்கிறது என தாய் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
பிரேதே பரிசோதனை அறிக்கையை பொலிசாரின் பிடியில் இருந்த தாய் ராஜேஸ்வரியிடம் காட்டிய வைத்தியர் ‘உங்களின் மகன் மாரடைப்பால்தான் மரணமானார்’ என கூறி கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளார்.
அதனை ஏற்க மறுத்ததான் அழுது குழறி தன் மகனின் உடலை முழுமையாக பார்த்தேன். அவனது கால்கள் நேரான திசையில் இல்லாது பிரண்டு திரும்பியிருக்கிறது. உடலில் காயங்கள் இருக்கின்றன அதனால் மாரடைப்பால் மரணமானது என்பதனை ஏற்க முடியாது எனக் கூறியதாக தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை காட்டி உடலைப் பொறுப்பெற்று றாகமவில் அடக்கம் செய்யுமாறு காவற்துறையும் வைத்தியசாலைத் தரப்புகளும் தன்னை வற்புறுத்தியதாக கூறிய தாய் ராஜேஸ்வரி தான் நிலத்தில் கிடந்து புரண்டு கத்தி அழுது தனது மகனின் உடலை கையளிக்குமாறு கோரியதாகவும் கூறினார்.
எனினும் காவற்துறையினர் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் உடலை திங்கட் கிழமைவரை பிரேதசாலையில் வைக்குமாறு கூறி தான் வவுனியா திரும்பியதாகவும் கூறிய நிமலரூபனின் தாயார் ராஜேஸ்வரி இன்று மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அங்கே தனது மகனின் உடலை மீண்டும் சுயாதீனமான பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரியும் உடலை தம்மிடம் கையளித்து அதனை உரிய சடங்குகளின் பின் வவுனியாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரியும் மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.