பக்கங்கள்

29 ஜூலை 2012

நல்லூரில் இதுவரை 20 பவுண் நகைகள் திருட்டு!


நல்லூர்க் கந்தன் கொடியேற்ற நாள் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் களவு போயுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். இனிவரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலீசாருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் திருட்டுச் சம்பவங்களை குறைக்க முடியும். ஆலயச் சூழலில் பெண் திருடர்களும் பக்தர்களின் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லூர் கோயிலில் தற்போது 600 காவற்றுறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவ் எண்ணிக்கையிலிருந்து மேலும் 150 பேர் கூடுதலாக இணைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.