பக்கங்கள்

30 ஜூன் 2012

திருமலையில் தமிழர் நிலங்களை அபகரித்து கடற்படை முகாம்!

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன் வெளி பகுதியில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகளில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளில் குடியிருக்கவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியாதநிலை காணப்படுவதாக காணிச் சொந்தக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தோப்பூர் பிரதேச முஸ்லிம் மக்களினதும் சீனன் வெளி பிரதேச தமிழ் மக்களினதும் காணிகளாகும். இந்தக் காணிகளுக்கான உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருந்தும் தமது காணிகளை மீளப் பெற முடியாதுள்ளதாக காணிச் சொந்தக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி காணிச் சொந்தக்காரர்களுக்கான காணிகளை பெற்றுத்தர உரிய கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.