நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 ஜூலை 2012
இலங்கையே பற்றி எரிந்து கொண்டிருந்தபோது வீணை வாசித்த கருணாநிதியின் டெசோவில் கூட்டமைப்பு கலந்துகொள்வதா?-என்.ஸ்ரீகாந்தா
புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு-மஹிந்த.
வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும்.
இவ்வாறு நேற்று கடுந்தொனியில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை.
புலிகள் போல் நிபந்தனைகளை விதித்துக்கொண்டு பேச்சுக்கு வராமல் வேறு அழுத்தங்களைக் கொடுப்பது தவறு. உலகத் தலைவர்களுடன் நான் பேச்சுகளை நடத்தும் போது இந்த நிலைமையைத்தான் விளக்கிக் கூறுகிறேன். இது எனது தனிப்பட்ட விடயமல்ல. இது அனைவரினதும் பொறுப்பு. இதற்கு முன்வராத கட்சி பொறுப்பிலிருந்து தவறிய ஒரு கட்சியாகவே கருதப்படும்.
தேர்தல் தேவைதான்
தேர்தலை நாங்கள் நடத்துவதால் சிவில் சமூக அமைப்புகளுக்குப் பிரச்சினை. தேர்தல் நடத்தாவிட்டாலும் சிவில் அமைப்புகள் கூக்குரலிடும். தேர்தல் வேண்டாமென்று ஓர் எதிர்க்கட்சி நீதிமன்றம் செல்வதை இங்குதான் முதற்றடவையாகப் பார்த்திருக்கின்றேன்.
நாங்கள் தேர்தலுக்குப் பயந்தவர்கள் அல்லர். மக்களின் கருத்தை நாம் அவ்வப்போது அறியவேண்டியிருப்பதால் தேர்தலை நடத்துவதில் தவறில்லை. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை.
கட்டுப்பாடு
இணைய ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் சேறு பூசும் செயற்பாடுகள் குறித்து அரசு முழுக்கவனமும் கொண்டுள்ளது. ஊடகத் தர்மத்தை மீறும் எவரும் தாம் செய்வது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடாது.
எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் சிநேகபூர்வ முறையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு கையாளும். எவ்வாறாயினும், எமது நாட்டின் பாதுகாப்பு, இறைமை எவருக்கும் தாரைவார்க்கப்படமாட்டாது. எந்த சக்திக்கும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாங்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
30 ஜூலை 2012
பிள்ளைகளை தவிக்கவிட்டு படையினனுடன் ஓடிய தாய்!
![]() |
29 ஜூலை 2012
நல்லூரில் இதுவரை 20 பவுண் நகைகள் திருட்டு!
![]() |
இலங்கையின் ஆதரவு நாடுகள் நான்கு வெளியேற்றம்!
![]() |
ஐக்கிய நாடுகள் சபை ஜெனீவா |
28 ஜூலை 2012
கருணாநிதியின் "டெசோ"மாநாடகத்திற்கு மனோவுக்கும் அழைப்பாம்!
திமுகவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ அழைப்பாளர் ராதா கிருஷ்ணன் திமுக தலைமையின் சார்பாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
"டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள திமுகவின் அழைப்பு எமக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இலங்கையிலும், தமிழகத்திலும் எழுந்துள்ளன.
இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றனவா, இல்லையா என நாம் தேடி பார்ப்பது இல்லை. அது தமிழக அரசியல் கட்சிகளின் வேலை. எம்மை பொறுத்தவரையில், தமிழக அரசியல் கட்சிகளின் எல்லாவித நடவடிக்கைகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. எனவே இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் எந்த ஒரு நடவடிக்கையையும் விமர்சிப்பதில்லை என்பது நமது கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
எனினும், இம்மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் நாம் இதுவரையில் எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. எமது கட்சியின் தலைமைக்குழு இது சம்பந்தமான முடிவை எதிர்வரும் தினங்களில் எடுக்கும்" என்றார்.
நல்லூர் திருவிழாவிற்கு மேலும் 150 காவற்றுறையினர் பாதுகாப்புக் கடமையில்.
27 ஜூலை 2012
சுவிசில் இருந்து 3 தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்! அதிர்சியில் சுவிஸ் தமிழர்கள்!!
சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத்தமிழர்கள், சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள விடயம் சுவிஸ் தமிழர்களை அதிர்ச்சி கொள்ளவைத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமான நிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
பிரித்தானியா , அவுஸ்றேலியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் தமிழர்களை திருப்பி அனுப்ப தொடங்கியுள்ளது. சுவிஸ் நாட்டில் நிலையான அகதி அந்தஸ்துஅற்ற நிலையில், 2 000 தமிழர்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், மூவர் நாடுகடத்தப்பட்ட விடயம் , சமீபத்திய காலங்களில் அகதிஅந்தஸ்து கோரிய தமிழர்களை அச்சங்கொள்ள வைத்துள்ளது. திருப்பி அனுப்பட்டவர்கள் மூவரும் யாழ்பாணத்தினைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.
கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் , சுவிஸ் தமிழ் அகதிகள் விவகாரம் தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஓருங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் பங்கெடுத்திருந்த சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான திணைக்கள அதிகாரியொருவர், இலங்கையில் இறுதிபோர் இடம்பெற்ற பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் அகதிஅந்தஸ்து கோரிக்கைகளை சாதகமாக நோக்கப்படும் நிலை குறைவெனத் தெரிவித்திருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பபடும் இலங்கையர்கள் , சித்திரவதைகளையும் அச்சுறுத்தல்களையும் சிறிலங்காவில் எதிர்கொள்கின்றனர் என பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன. உறுதிப்படுத்தப்படதாக பிந்திய தகவலொன்றின்படி , 13 தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுஇவ்வாறிருக்க, நாடு திரும்பும் அகதிகளுக்கு செங்கம்பளம் விரிக்கமுடியாது எனவும் , சிறிலங்காவின் சட்டத்தின் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
கனேடியப் பிரஜை ஒருவர் வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டார்!
![]() |
கைது |
படைகளின் கோபத்தை கிளறவேண்டாமென சிவாஜிலிங்கத்தை எச்சரித்த பொலிஸ்!
![]() |
சிங்களப்பொலிஸ் |
26 ஜூலை 2012
எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 8 பேர் இராணுவத்தினரால் கைது!
ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும், இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவு கொள்ளும் வகையில், சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் வழங்காமல் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
இதனை நகரப் பகுதியில் நின்றிருந்த சிலர் பார்த்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தையும், அவருடனிருந்த 8 பேரையும் பொலிஸார் கைது செய்து, இரவு 9மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். தற்போதும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் வருகிறார் சிறிலங்கா அதிபர் – எதிர்ப்பு பேரணிக்கு தமிழர்களும் தயார்.
![]() |
மகிந்த ராஜபக்ச |
25 ஜூலை 2012
யாழில் புடைவைக்கடைகள் இரண்டு தீக்கிரை!
ஆட்கடத்தல் மோசடிக்காரர்களிடம் உயிரை மாய்க்கும் வெளிநாட்டுப்பயணம். - வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு.
வெளிநாட்டுக்கு ஆட்களையனுப்பும் சட்டவிரோத பயணமுகவரான இலண்டனில் வாழும் லிங்கன்
என அறியப்படுபவரால் சுவிசுக்கு அனுப்புவதற்காக அழைத்துவரப்பட்ட யாழ் தீவகத்தை சொந்த
இடமாக்கொண்ட 27 வயதையுடைய செல்வராணி (செல்வி) கடந்த வருடம் தன்சானியா நாட்டில்
தற்கொலை செய்துள்ளார் என்பது அவரது உறவினர்களாலும் அவருடன் பயணத்தை
மேற்க்கொண்டிருந்த சக பயணிகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி செல்வி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வந்திருந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு சுவிசிற்கு செல்வதற்காக கென்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு ஆட்கடத்தல்காரரது வீட்டில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தன்சானியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தார். சுமார் 14 மாதங்களாக தனது பயணத்தை தொடர்ந்த செல்வி தனது வாழ்வை பாதிவழியில் முடித்துக்கொண்டதற்கான காரணம் சுகவீனம் என தெரிவிக்கப்பட்டு செல்வியின் மாமனாரிடமிருந்து பெறப்பட்ட பணம் முப்பதினாயிரம் டொலர்களும் பயணமுகவரான லிங்கம் என்பவரது சுவிசில் வசிக்கும் உதவியாளரால் மீள் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது. செல்வியோடு சம காலத்தில் அதேபகுதியில் பயணத்திற்காக தங்கவைக்கப்பட்டிருந்த தற்போது சுவிசில் வாழும் நபர் ஒருவரது தகவலின்படி செல்வி தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டிருந்ததன் நோக்கம் பாலியல் ரீதியான உள்நோக்கம் கொண்டே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிது. இதை செல்வியின் உறவினர்களும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தான் சந்திப்பதாக செல்வி அதேநாட்டில் தங்கியிருந்த சிலரிடம் சொல்லாமல் சொல்லிவந்துள்ளார். தன்னை திருப்பியனுப்புமாறும் உறவினரிடம் மன்றாடியுள்ளார். பயணத்திற்கான பயணமுகவரான லிங்கம் பணத்தை கட்டம் கட்டமாக முற்றாக பெற்றுவிட்ட நிலையில் திருப்பியனுப்ப மறுத்துள்ளார். சமகாலத்தில் செல்வியின் மாமனாரும் பயணத்தை தொடருமாறு செல்வியிடம் வற்புறுத்தியுள்ளார் என தெரியவருகிறது. செல்வி தன்சானியாவிலுள்ள லிங்கனது இடைத்தங்கல் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தார். லிங்கன் வெளியூர் சென்றுவரும்போது அந்நாட்டவரான பெண்னொருவரே செல்வியை கவனித்துவந்துள்ளார். அதை உறவினர்களும் அறிந்திருந்தனர். அதே லிங்கனது பயணிகளான 3 இழைஞர்கள் வேறொரு வீட்டில் தங்கவைக்கப்ட்டிருந்தனர். இவர்களுக்கிடையில் தொலைபேசித் தொடர்பு இருந்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவலின்படி செல்வி தற்கொலை செய்தபோது லிங்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார். செல்வி சுகவீனமடைந்திருப்பது உண்மையாயின் செல்வியோ அல்லது அவரது பயணமுகவர் லிங்கனோ ஏன் உறவினர்களுக்கு அறிவிக்கவில்லை என்பதே கேள்வி? இதை லிங்கனிடம்தான் கேட்கவேண்டும். இந்த லிங்கன் என்பவர் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்துவருகிறார் இவருக்கு லண்டனில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சொந்தமாகவுள்ளதாக அறியவருகிறது. அதேபோல் தன்சானியாவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சொந்தமாக உள்ளன. இவரது சொந்தப்பெயர் மற்றும் முகவரி எமக்கு கிடைத்திருந்தாலும் நன்கு உறுதிப்படுத்த முடியதகாரணத்தினால் தற்போது வெளியிடமுடியவில்லை. மேற்படி லிங்கன் என்பவர் ஊடாகவே ஆட்கடத்தல் மோசடியில் பலரை ஏமாற்றிய முகவரான ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த சூரி - சோபாவும் 2011 ஏப்ரல் மாதமளவில் இலண்டனுக்கு பயணமாகி அங்கு அகதி தஞ்சம் கோரியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரது கணவரான சூரி அல்லது அப்பன் என அறியப்படும் நபர் சுவிசில் அல்லது லண்டனில் தற்போது தலைமறைவாகியுள்ளார். இலண்டனில் லிங்கம் என்பவரைப்பற்றிய தகவல்கள் இயற்பெயர் மற்றும் முகவரி தெரிந்தோர் எமக்கு அனுப்பிவைத்தால் உறுதிப்படுத்தியபின்னர் படத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம். தற்போது லிங்கன் இலங்கையில் தலைமறைவாகியிருந்து ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது. பயணத்தை பாதிவழியில் முடித்துக்கொண்ட செல்வியின் அப்பா கடலில் தொழிலுக்கு சென்று காணாமற்போய்விட்டார். செல்வியின் உறவினர்களிடம் நாம் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு அமைய இப்புகைப்படத்தை மட்டுமே வெளியிடமுடிகிறது என்பதை அறியத்தருவதோடு அவரது சுயவிபரம் அனைத்தும் வெளியிடுவது தவிர்க்கப்படுகிறது. எனவே வெளிநாடு என்று உங்களது சொத்துக்களை விற்றுவாரி ஈடுவைத்து கடமைப்பட்டு கடன்பட்டு புறப்படுவோர் நீங்கள் மேற்க்கொள்ளும் பயணம் பற்றிய அனைத்து நன்மை தீமைகளையும் மறுபரிசிலணை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது. மேலும் பல ஆகாய மற்றும் கப்பல் மூலமான ஆட்கடத்தல் மோசடிக்காரரது தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவைகளும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களது காணிகளை பிடிக்கிறார்கள் சொத்துகளை அள்ளுகிறார்கள் பறிக்கிறார்கள் என குமுறி எழுந்து போராடும் தமிழினம் - தமிழர்கள் மத்தியில் சாத்தான்களாக மறைந்திருந்திருந்து உள்ளிருந்து சுரண்டும் இவர்கள்மீதும் கவனம் கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது. இத்தகவல்களை திரட்டி வெளியிடும் நாம் தமிழர்களது வெளிநாட்டுப்பயணங்களுக்கோ அவர்களது தனிமனித உரிமையுடன் கூடிய செயற்பாடுகளுக்கோ எதிரானவர்கள் இல்லை என்பதை தெரிவித்து மாறாக சுரண்டல்கள் சுத்துமாத்துகளுக்கு எதிரானவர்கள் என்பதை அறியத்தருகிறோம். இந்தச் சுரண்டல் காரர்களுக்கு எதிராக தேவைப்படுமாயின் நீதிமன்றங்களிலும் ஆவணங்களுடன் சமூகம் தர தயாராக உள்ளோம். ஆட்கடத்தல் தொழிலில் சுரண்டல் சுத்துமாத்துக்காரர்களால் பாதிக்கப்பபட்டோர் தங்களது தகவல்களை எமக்கு அனுப்பிவைப்பதன் மூலம் அவற்றை தீர ஆராய்ந்து நாம் வெளியிட்டு வைப்போம் இதனால் இனிவருங் காலங்களில் எமது சமூகம் பாதிப்படையாமல் விழிப்படையவைக்க முடியும் என்பதை தெரியப்படுத்துகிறோம். எமது மின்னஞ்சல் முகவரி: theepikalanka@gmail.com அநீதிகளுக்கும் மோசடிகளுக்கும் எதிரான புலம் பெயர் இலங்கையர் குழு. |
24 ஜூலை 2012
வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிமலரூபனின் திருவுடலுக்கு அஞ்சலி!
23 ஜூலை 2012
உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது அடாவடித்தனம் புரியமாட்டேன்- நீதவான் கணேசராசா மன்றாட்டம்!
காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளை இறந்துவிட்டதாக கருதி மரணச்சான்றிதழை பெற்றுக் கொள்ள வற்புறுத்தல்!
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளை இறந்துவிட்டதாக கூறி மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஒன்றினை படைத்தரப்பு ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினது அலுவலகத்தில் இன்று அவர் நடத்தியுள்ள ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் முல்லைதீவு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கடந்த சனி மற்றும் வெள்ளிக்கிழமை காணாமல் போனோரது உறவுகளை அழைத்த படையினர் காணாமல் போனவர்கள் காணாமல் போய் மூன்று வருடங்களாகிவிட்டன. இனிமேல் அவர்கள் வீடு திரும்பமாட்டார்கள். எனவே அவர்கள் இறந்துவிட்டதாகவே கருத வேண்டும். அவர்களுக்குரிய மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என நிர்ப்பந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா ஜோசப் படை முகாமிலிருந்தே வந்திருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே கற்;றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் காணாமல் போன தமது உறவுகள் பற்றி வாக்குமூலங்கள் அளித்தவர்களே அழைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டதுடன் அவர்களிடமிருந்து வெள்ளைத் தாள்கள்களில் ஒப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஐ.நாவில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துமாறான நிர்ப்பந்தங்கள் அதிகரித்துள்ளன. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் பிரகாரம் காணாமல் போனோரை கண்டறிவதற்கு விசாரணை குழுவொன்றை அமைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதுவரை அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை.
சரண் அடைந்தவர்கள் எனும் போது பலர் குடும்பத்தவர்களால் இறுதி யுத்தத்தின் போது குடும்பத்தவர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் மரண சான்றிதழ் வழங்கப்படுவதானால் அவர்களுக்கு என்ன நடந்ததென்பது முதலில் தெரிவிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும்30 பேர் இவ்வாறு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
22 ஜூலை 2012
அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் றிசாத் பதியுதீன்!
ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை ஜூலை 1ஆம் தேதி தமிழக காவல் துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தினர். அவர்களில் 4 பேரை அன்று நள்ளிரவே விடுவித்துவிட்டு 2 பேரை மட்டும் நீதிபதி முன்பு நிறுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இராமச்சந்திரன் என்கிற ரமேஷ், காந்தி மோகன் என்கிற சுதர்சன் ஆகிய இருவர் மீதும் சாட்டிலைட் டெலிபோன் வைத்திருந்தார்கள், ஆஸ்ட்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல பணம் திரட்டினார்கள் என்று குற்றம் சாற்றி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தப் பிறகு, அவர்கள் இருவரையும் விசாரணைக் காவலில் எடுத்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளது க்யூ பிரிவு. விசாரணையின் போது, ஆஸ்ட்ரேலியாவிற்கு செல்வதற்காக சேர்த்த பணம் யாரிடம் உள்ளது என்று கேட்டுத்தான் துன்புறுத்தியுள்ளனர். ஆக, இவரகள் மீது சாட்டிலைட் ஃபோன் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாற்று பொய்யானது என்பதும், ஆஸ்ட்ரேலியாவிற்கு அகதிகளாகச் செல்ல அவர்கள் சேகரித்த பணத்தை அபரிக்கவே இவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததும் உறுதியானது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட காந்தி மோகன், இராமச்சந்திரன் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப் படி நேற்று அவர்கள் விடுவிக்கப்பட இருந்த நிலையில், காலை 5 மணிக்கே சிறைக்கு வந்து, மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, அந்த இருவரையும் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்று அடைத்துள்ளது க்யூ பிரிவு. இது முழுக்க, முழுக்க சட்டத்திற்குப் புறம்பான, நீதியற்ற நடவடிக்கையாகும். இந்த இருவரும் நீதிமன்றக் காவலில் இருந்தபோதே விசாரணை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு, இப்போது மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சித்தரவதை செய்யவே தவிர, வேறு காரணிகள் இல்லை. ஈழத்து சொந்தங்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடுத்து வைத்து க்யூ பிரிவு சித்ரவதை செய்கிறது என்கிற குற்றச்சாற்றுக்கு இந்த நிகழ்வே சரியான சான்றாகும்.
இப்படித்தான் பல ஈழ அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது க்யூ பிரிவு. கடந்த காலங்களில் ஈழ அகதிகளிடம் இருந்த பணத்தை பறித்த க்யூ பிரிவு அதனை ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது இல்லை. பணம் மட்டுமல்ல, அவர்களிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது இல்லை. தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு செய்துவரும் இப்படிப்பட்ட அராஜகங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவே கடந்த 11ஆம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம் மறியல் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். ஆனால் அந்த போராட்டத்திற்குப் பிறகும் க்யூ பிரிவின் இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கை தொடர்கிறது என்றால், ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களுக்கு இந்த ஆட்சியிலும் மதிப்பில்லை என்றே தெரிகிறது.
இந்த நாட்டில் வாழும் தீபெத் அகதிகளும், பர்மா அகதிகளும் சீருடமும் சிறப்புடன் முழு உரிமையுடன் பாதுகாப்பாக வாழ்ந்து வருகையில், நமது ஈழத் தமிழ் சொந்தங்கள் மட்டும் அவமானப்படுத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்களை துன்புறுத்துவதற்காகவே சிறப்பு முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் தனிமைச் சிறைக் கூடங்களை க்யூ பிரிவு பயன்படுத்தி வருகிறது.
ஈழத் தமிழ் சொந்தங்கள் அரசியல் சம உரிமை பெறும் வரை ஒயமாட்டேன் என்று தமிழக சட்டப் பேரவையிலேயே தமிழக முதல்வர் முழங்கினார், ஆனால் அவருடைய ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டிலேயே அவர்கள் கேவலமாக நடத்தப்படுவது முரண்பட்ட நிலையாக உள்ளது. எனவே இதற்கு மேலும் தாமதிக்காமல், இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
21 ஜூலை 2012
ஆலயத்தினுள் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
சிவந்தனின் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள்.
லண்டன் ஒலிம்பிக் திடலுக்கு முன்பாக நாளை தினம் ஆரம்பமாகவுள்ள மனித நேயன் கோபி சிவந்தனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகள் பெறுமளவில் பங்கெடுப்பதன் மூலம் சிவந்தனின் கோரிக்கைகள் சர்வதேகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மனித நேயன் சிவந்தனின் உணர்வு மிக்க செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது இனத்திற்கு விடுதலை வேண்டி முதன் முதலாக பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவுக்கு நடைப்பயணம் செய்து ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்திற்கு எமது இனத்திற்கு ஏற்பட்ட துயரங்களையும் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்தார்.
அதே போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒலிப்பிக் விளையாட்டை பார்வையிடுவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள்இ மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் திடலுக்கு முன்பாக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் சர்வதேச நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த சிவந்தனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதற்கு புலம்பெயர் நாடுகளின் இயங்கிவரும் தமிழர்களின் ஒரே கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானியா கிளை அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
தாயக மக்களின் விடுதலைக்காக மனித நேயன் சிவந்தன் துணிச்சலுடன் இப்போராட்டத்திற்கு முன்வந்துள்ள நிலையில்இ அவரின் உன்னத தியாகச் செயற்பாட்டிற்கு உரமுட்டுவதுடன்இ சர்வதேசத்தை அதிரவைக்குமளவுக்கு பிரித்தானியா வாழ் மக்கள் மட்டுமின்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மகிந்த அரசின் தரகரே கக்கீம்,முஸ்லீம் மக்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும்.
20 ஜூலை 2012
வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை!
மோதாதே முகவரி இழப்பாய்; ரிஷாத்துக்கு யாழ். சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

19 ஜூலை 2012
வவுனியாவில் விசர் நாயொன்று 34 பேரைக் கடித்துள்ளது!

நயினாதீவில் வைத்தியர்கள் இல்லாததனால் பிரசவ வலியில் தாயும் சிசுவும் பரிதாபமாக பலி!
நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் அதேவேளை அவசர சிகிச்சையினை அப்பகுதி மக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு நயினாதீவினைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக பிரதேசவைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த வைத்திய சாலையில் வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் படி வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேலணை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகும் கடந்த 7 மாதகாலமாக செயலிழந்து காணப்பட்டதால் சிறிய படகு ஒன்றின் மூலம் வேலணை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட குறித்த பெண்ணின் நிலை மோசமாக இருந்ததன் காரணத்தினால் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் கருவில் இருந்த நிறைமாத சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வாதிகார கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்களாம்!பிள்ளையான் சொல்கிறார்.
18 ஜூலை 2012
புலிகளின் அடியால் கோத்தபாயவிற்கு மண்டை குழம்பியதாம்!
போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென மக்களை மிரட்டுகிறது படை!
நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என மக்களுக்கு இராணுவம் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை நோக்கிச் செல்லும் போக்குவரத்து பஸ்கள் அனைத்தும் வல்லை இராணுவ காவலரணில் சோதனைக்குட் படுத்தப்படுத்தப்படவதாகவும், இதன்போது நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என படையினர் மக்களிடம் மிரட்டும் பாணியில் அறிவித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
வல்லை இராணுவ காவலரணில் போக்குவரத்து பஸ்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டு பயணிகளிடம் அட்டையாள அட்டைகளும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை அட்டையாள அட்டைகள் கொண்டுவராத பயணிகள் கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
நெல்லியடியில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது அதில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அங்கு தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளது என அவர்கள் பயணிகளிடம் தூய தமிழில் கூறிவருவதாக தெரியவருகின்றது.
இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நெல்லியடி பஸ் நிலையப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் நிமலரூபனின் படுகொலை ஆகியன தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நெல்லியடிப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பொலிஸ் பிரசன்னமும் காணப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினரது நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக தெரியவருகின்றது.
17 ஜூலை 2012
ஆர்ப்பாட்டம் நடத்த பருத்தித்துறை நீதவான் அனுமதி! யாழ். நீதவான் கணேசராசாவுக்கு செருப்படி!
யாழ்.நெல்லியடி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை வழங்குமாறு பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த பருத்தித்துறை மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரம் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டார்.
சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி படுகொலை செய்யப்பட்டமை, தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்றமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை நெல்லியடி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடை உத்தரவு வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றில் மனு செய்திருந்தனர்.
யாழ் நகரில் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு வழங்கிய யாழ். நீதிபதி கணேசராசாவுக்கு இத்தீர்ப்பு கடும் செருப்படியாக அமைந்துள்ளது. சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலியாக விளங்கும் அநீதவான் கணேசராசா ஜனநாயக போராட்டத்திற்கு தடை விதித்து தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு துணைபோன அநீதியான செயலை செய்திருந்தார்.
நாளை நெல்லியடி பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் இதற்கு தடையுத்தரவை பெற பொலிஸார் கடும்பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் இன்று மாலை தமது பக்க நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர்.
இதற்கமைய, தடையுத்தரவை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பருத்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம், குறித்த ஆர்பாட்டத்தை தடுக்காத வகையில் உரிய பாதுகாப்பை வழங்குமாறும் நீதிபதி பொலிஸாருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டதற்கிணங்க போராட்டம் நாளை நெல்லியடியில் இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 109 பேருக்கு எதிர்வரும் 30ம் திகதிவரை சிறை!
முஸ்லிம் காங். உறுப்பினர்கள் ஐ.தே.க.பட்டியலில் போட்டி.
16 ஜூலை 2012
ஈ.பி.டி.பி வாகனம் மோதி ஆட்டோ செலுத்துனர் காயம்.
திடீர் என வீதிக்குக் குறுக்கே பாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வாகனத்துடன் ஆட்டோ ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த சபேசன் (வயது31) என்னும் குடும்பஸ்தரே மேற்படி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் ஆவார்.மாரடைப்புக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியைப் பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரை வைத்தியசாலை வாயிலில் இறக்கி விட்டு வெளியே வந்த அவரது வாகனத்தைச் சாரதி வைத்தியசாலை வீதியிலுள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டுள்ளார்.
அவ்வேளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களைக் கருத்தில் கொள்ளாமல் நடு வீதியில் இருந்து பின்பக்கமாக வந்து திரும்ப முற்பட்டவேளை வீதியால் வந்த ஆட்டோ ஒன்று அந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
ஆட்டோ சாரதி தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினருடைய வாகனம் சிறு சேதங்களுக்கு உள்ளான அதேவேளை குறித்த ஆட்டோ பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸார் இதனைப் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியதோடு விபத்தில் சம்பந்தப்பட்டவர் தொடர்பிலும் சேதமாக்கப்பட்ட வாகனம் தொடர்பிலும் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் பதிலளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றி வளைப்புத் தேடுதலுக்குச் சென்ற பொலிஸார் மீது சுற்றி வளைத்துத் தாக்குதல்!
பண்டாரகம பிரதேசத்தில் சட்ட விரோத விலங்கு வதை நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாணந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை வலய குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன் தினம் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது விலங்கு வதையில் ஈடுபட்டிருந்த சிலர் ஆயுதங்களால் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பூநகரியில் தீ விபத்தில் மாணவி காயம்!
பூநகரியில் தவறுதலாக ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தனது வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக மண்ணெண்ணெய்யை ஊற்றிய சமயம் தனது உடையிலும் ஊற்றப்பட்ட போதும் அதனைப் பொருட்படுத்தாது குறித்த மாணவி, விளக்கைப் பற்ற வைத்தபோது, உடையில் தீ பற்றிப் பரவியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் உடனடியாக அவர் பூநகரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்படுள்ளார்.
பூநகரி மகாவித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்கும், பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சந்தனகுமார் மோனிஷா என்ற 14 வயது மாணவியே மேற்படி தீக்காயங்களுக்கு உள்ளானவராவார்.
15 ஜூலை 2012
துமிந்த நாடு திரும்பா விட்டால் சிங்கப்பூர் அரசிடம் முறையிடப்படும்!
இலங்கையர்களை திருப்பி அனுப்ப சுவீடன் நடவடிக்கை!
யுத்தப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக ஏற்பட்ட யுத்தத்தினால் தமது உடமைகளை இழந்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களாக தஞ்சமடைந்துள்ளனர்.
இருப்பினும் இலங்கையில் தற்போது சமாதானம் நிலவுவதாக அரசினால் கூறப்பட்டு வரும் நிலையில், சுவீடனில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ள சகல இலங்கையர்களையும் நாடு கடத்த இந் நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுவீடனில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களுக்கு நாடுகடத்துதல் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை நாட்டில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியான நிலையில் இருப்பதனால் தற்போது இலங்கையில் இருந்து பெருமளவிலான மக்கள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல்வழியாக தப்பிச் செல்கின்றனர்.
எனினும் சுவீடன் போன்ற நாடுகள் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் போது இங்கு வரும் அவர்கள் பாதுகாப்பு ரீதியில் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.
இதனால் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அமைப்புக்களும் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என சர்வதேச நாடுகளிடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 ஜூலை 2012
சுவிசிலிருந்து வந்த குடும்பத்தினருக்கு மயக்கமருந்து கொடுத்து நகைகள் கொள்ளை!
சுவிஸிலிருந்து வந்து கொழும்பின் வெள்ளவத்தையிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த தமிழ் குடும்பமொன்றுடன் நெருங்கி பழகிய நபர் ஒருவர் அவர்களை ஏமாற்றி உணவில் மயக்க மருந்தினை கலந்து கொடுத்து தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் பலவற்றை கொள்ளையிட்டு சென்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
வெள்ளவத்தை, தயாவீதி பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் கடந்த வாரம் தங்கியிருந்த தமிழ் குடும்பமொன்றிற்கே இந்த நிலை வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பமொன்று கடந்த வாரம் இலங்கை வந்துள்ளது.
இவ்வாறு இலங்கை வந்த அவர்களில் இரு ஆண்கள் இரு பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்கியிருந்தனர்.
குறித்த குடும்பத்தினர் யாழ்ப்பாணம் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததுடன் வெள்ளவத்தை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தனர்.
அதன்போது அவர்கள் தங்கியிருந்த அதே விடுதியில் தங்கியிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு நபர் அக்குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகியதுடன் அடுத்த நாள் அவர்களுடன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் போது கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கு இடையில் உணவு உட்கொள்வதற்காக வான் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்போது 55 வயதுடைய அந்த நபர் குறித்த தமிழ் குடும்பத்தாருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார்.
உணவில் மயக்க மருந்து கலந்திருந்தமை தெரியாத அவர்கள் உணவருந்திய சில நிமிடங்களில் வானிற்குள் மயங்கியுள்ளனர்.
அதன்போது அச்சந்தேக நபர் அவர்களிடமிருந்த 5 பவுண் நிறையுடைய இரு தங்க சங்கிலிகள், ஒரு பவுண் நிறையுடைய மோதிரம் மற்றும் 450 சுவிஸ் பிராங், 500 அமெரிக்க டொலர்கள் போன்றவற்றை களவாடிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
குறித்த சந்தேகநபர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் ௭னவும், அவர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்காக இந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரையில் ௭வரும் கைது செய்ததாக தெரியவில்லை.
வடக்கில் தேர்தலை நடத்த மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகிறார்-தினமணி நாளேடு.
வடக்கு மாகாணத்தில் புலிகளின் கலையாத தடங்களைக் கண்டு மனக்கலக்கம் கொள்பவராகவே இலங்கை ஜனாதிபதி இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு தமிழகத்தின் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் லண்டன் சென்ற இலங்கை ஜனாதிபதி, அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தனது நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு நாடு திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்ரெம்பருக்குப் பின்னர் நடத்தபோவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கு முக்கியக் காரணமாக வாக்காளர் பட்டியல் உள்ளது. தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போது வடக்கில் அமைதி நிலவுவதால், மக்கள் படிப்படியாக மீளக்குடியமர்ந்துவருகின்றனர்.
எனவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பின்னரே முறையாகத் தேர்தல் நடத்தமுடியும் என்ற நிலைப்பாட்டை அரச தரப்பு எடுத்துள்ளது. இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் சந்தேகம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல்கயின்போது மக்கள் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்கு வாக்களித்தனர்.கடந்த ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள்.
இப்போது மட்டும் மஹிந்தவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.
ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம்.
அங்கே இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில்,இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் புதிதாக தமிழ் முதலமைச்சர் ஒருவர் வந்தால் குன்றிப்போகும்.
மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், "மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க் கருத்துகள் இப்போது கசியவிடப்படுகின்றன.
இத்தகைய கருத்து, குறிப்பாக லண்டன் சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் உருவாக்கப்பட்டது.
அதாவது, புதிய தேர்தல் ஒன்றின்மூர் வடக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் தெரிவுசெய்ய்பட்டால் கனடா, லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அதனை வாய்பாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
மஹிந்த சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவேண்டும் என்பதற்காக தாயகம் திரும்ப மாட்டார்கள்-என்று அந்த தலையங்கம் விரிகிறது.
13 ஜூலை 2012
சிறுவர் இல்ல சிறுமிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்.
நிமலரூபனின் பெற்றோருக்கு பொலிஸார் அழைப்பாணை!
நெளுக்குளத்திலுள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம்
சென்ற வவுனியா காவல்துறையினர் அழைப்பாணையை அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத
நிலையில், அங்கிருந்த உறவினரிடம் கையளித்துச் சென்றுள்ளனர்.
06.07.2012ந் திகதி வரையப்பட்ட இந்த அழைப்பாணையின்
பிரகாரம், நிமலரூபனின் மரணம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு நிமலரூபனின் பெற்றோர்
19.07.2012ஆம் திகதி காலை 09.00 மணிக்கு நீர்கொழும்பு நீதிமன்றிற்கு வருமாறு
அழைக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் போட்டி.
சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
மலையக சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் மூலமாகவே தமிழ்ப் பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அழுத்தம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கொடுக்கப்பட்டு வந்தது. அதனையடுத்தே இத் தீர்மானம் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான முயற்சியாக, இக் கட்சிகளை கூட்டிணைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதென்ற பொதுவான கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று தீர்மானம் எட்டப்பட்டிருக்கிறது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இவ்விடயம் முடிவுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி, ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணி இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதபோதும் இத்தீர்மானத்துக்கு அக்கட்சியினர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 ஜூலை 2012
வட மாகாணத்தில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினருக்காக மூடப்பட்டுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளதாக அந்த மாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போருக்கு பின்னர், வடபகுதியில் உள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர்களுமே உதவி செய்தனர் எனவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அடிக்கடி வந்து வாக்குறுதிகளை மாத்திரம் அள்ளி வழங்கி விட்டு சென்றதாகவும் வடமாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமால் ராஜபக்ஷ, வன்னியில் உள்ள பாடசாலைகளின் அபிவிருதிக்காக 5 மில்லியன் ரூபாவும் நீச்சல் தடாகமும் அமைத்து கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதுவும் மகிந்த சிந்தனைக்கு ஈடான வாக்குறுதியாக மாறியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 491 பாடசாலைகளில் 67 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் உள்ள 107 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 112 பாடசாலைகளில் 18 பாடசாலைகளும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 126 பாடசாலைகளில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 197 பாடசாலைகளில் 3 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த மாவட்டத்தல் 109 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் பல பாடசாலைகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ளன.
வடக்கில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யாது, பாடசாலைகளை சுற்றி தவறணைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது வட பகுதியை சேர்ந்த இளைஞர்களை அழிக்கும் மறைமுக வேலைத்திட்டம் எனவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)