யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் வைத்து குறித்த தாயும் அவரது இரண்டு வயது மகனும் கடத்தப்பட்டனர்.
தாயையும் அவரது இரண்டு வயதுச் சிறுவனைக் கடத்தி சென்ற குற்றத்திற்காக கணவன் மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக அவர் கூறினார்.
கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.