பக்கங்கள்

27 செப்டம்பர் 2012

மட்டக்குளியில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை!

மோதர - மட்டக்குளி - தொட்டுபொல வீதியில் பூசகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) இரவு 8 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞராவார். இவர் வசித்து வந்த வீட்டில் தனியார் ஆலயம் ஒன்று இயங்கியதாகவும் அதில் குறித்த இளைஞரும் அவரது தந்தையும் பூஜை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.