யாழ். கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரே வாள்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
இதன்போது சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வருகை தந்ததைத் தொடர்ந்து தாக்குதல் குழுவினர் தப்பியோடியுள்ளனர்.
அத்தோடு அவர்கள் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிகள் ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இப்பகுதியில் அடிக்கடி குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதோடு இவற்றை பொலிஸார் கண்டும் காணாதவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.