பக்கங்கள்

23 செப்டம்பர் 2012

ஐநா மனித உரிமை பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடருக்கு 32 ரகசிய அறிக்கைகள்!

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடருக்கு 32 அரச சார்பற்ற நிறுவனங்கள் ரகசிய அறிக்கைகளை அனுப்பி உள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்த நிறுவனங்களில் பல வன்னியில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அறிக்கைகளை அனுப்பிய அரசசார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தோனேசியாவை இரண்டாக பிளவுப்படுத்த முயற்சிக்கும் மாநாடு ஒன்றுக்கு சென்று அந்த நாட்டினால் வெளியேற்றப்பட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.