பக்கங்கள்

19 செப்டம்பர் 2012

குரானை புறந்தள்ளி மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுகிறது முஸ்லிம் காங்கிரஸ்!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருக்குரானை ஒருபக்கம் வைத்து விட்டு மஹிந்த சிந்தனையின் கீழ் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியிக் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசிற்கு எதிரானவர்கள் என காண்பித்து மக்களிடம் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க் கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர், நான் முன்னதாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து விலகி வேறாக போகாது என குறிப்பிட்டேன். அதே போல் நடந்து விட்டது. அரசுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பின்னர் நடந்தது அனைத்துமே நாடகம். இங்கு முஸ்லிம் காங்கிரஸ் செய்தது என்ன? மக்களை இந்தப் பக்கம் ஏமாற்றி விட்டு சலுகைகளை அனுபவித்தல். இங்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு விடயங்கள் முன்னின்றன. ஒன்று பள்ளி உடைத்தல். மற்றையது அமைச்சு பதவியை பாதுகாத்தல். இதில் இரண்டாவது தெரிவையே முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்துள்ளது. இதிலிருந்து ஒருவிடயம் தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒருபோதும் அரசிற்கு எதிராக செல்லாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.