இலங்கை சிறையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களில் ஒருவரான தங்கராஜ் உயிரிழந்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் ஓராண்டுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய தூதரகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போது இலங்கை போலீசார் வாய்தா வாங்கிக் கொண்டே வந்தனர்.
இந்த நிலையில் இன்று முற்பகல் திடீரென ஐந்து மீனவர்களில் ஒருவரான தங்கராஜ் என்பவர் உயிரிழந்திருப்பதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். மீனவர் தங்கராஜின் மரணம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.