வடபகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள் வடக்கின் தற்போதைய நிலமை தொடர்பாக மிகவும் ஆவலாக கேட்டறிந்தனர்.
பொது நலவாய பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் 60 பேர் வட பகுதிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்
அதன் ஒரு பகுதியாக இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த வெளிநாட்டுப் பிரதி நிதிகள் யாழ்ப்பாணத்தில் முக்கிய இடமான பொது நூலகத்தினை பார்வையிட்டதுடன் மீள்குடியோற்ற பகுதிகளான மறவன் புலவு, பளை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளனர்.
காலை வந்தடைந்த இவ் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு யாழில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தமது காலை உணவினை உட்கொண்டனர்.
பின்னர் இடம்பெற்ற கலந்துறையாடவில் வடபகுதி மக்களின் மீள்குடியேற்றம்,கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள்,கூட்டுறவு நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் ஆவலாக கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் யாழ் பொதுநூலகத்தில் யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,வடமாகாண ஆளுனரின் செயலாளர், ஈ.பி.டி,பியின் நடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மாநகர முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.