எதற்கெடுத்தாலும் இறந்தவர்களைச் சாட்சிக்கழைத்து அரசியல் செய்து பழகிப்போன கலைஞர் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தனது தவறுளை நியாயப்படுத்த சாட்சிக்கு அழைத்திருக்கிறார். ஆனால் நாகரிகம் கருதி அவர் சொன்ன விடயங்களைத் தெரியப்படுத்தமாட்டேன் என்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை
இலங்கைத் தமிழர் பிரச்னையில், என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு, எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை, தமிழக மக்கள் அறிவர். முதுகில் பெரிய அறுவை சிகிச்சை வரை நடைபெற்று, அது உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த, 1986ம் ஆண்டு, ஜூன், 3ம் தேதி, என்னுடைய பிறந்த நாள் விழாவை ஒட்டி, உண்டியலில், 2.75 லட்சம் ரூபாய், மாலைக்குப் பதிலாக சேர்ந்தது.அந்த நிதியை விடுதலைப்புலிகள் இயக்கம் உட்பட, அனைத்துப் போராளி இயக்கங்களுக்கும் பிரித்து அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சிலரின் மறைமுகத் தூண்டுதல் காரணமாகவோ, என்னவோ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளவில்லை.
அன்றிரவு, 12 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் என்னை, என் இல்லத்தில் வந்து சந்தித்து, தங்களால் ஏன் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை என்பதை விளக்கினார். என்னக் காரணம் கூறினார் என்பதை, நான் இப்போது நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும், என் மனச்சாட்சிப்படி என்னால் முடிந்த அளவிற்கு, என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.