நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் உழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மோசடி செய்யப்படும் பல பில்லியன் கணக்கான ரூபாய்கள் அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பலம்பொருந்திய அரசியல்வாதிகள் இவ்வாறு ஊழல் மோசடிகளின் மூலம் ஈட்டும் பணத்தை கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் முதலீடு செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மோசடியான முறையில் ஈட்டும் கறுப்புப் பணத்தை, சட்ட ரீதியான பணமாக மாற்றும் ஓர் மையமாக கொழும்புப் பங்குச் சந்தை செயற்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகச் சிறிய அளவிலான அபிவிருத்தித் திட்டம் முதல் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டம் வரையில் நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மிஹின் லங்கா, ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, இலங்கைக் கிரிக்கட், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகிய பல்வேறு நிறுவனங்களில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவில் ஊழல் மோசடிகள் செய்து பணம் சம்பாதித்த தலைவர்கள் அவற்றை அனுபவிக்க முடியாமல் உயிர் துறந்த வரலாறு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லிபிய அதிபர் முகமட் கடாபியே இதற்கான அண்மைய உதாரணம் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.